மின்சார ரெயில் சோதனை ஓட்டம்


மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
x

பழனி-கோவை இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

திண்டுக்கல்

ரெயில்வே துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவை வரை மின்மயமாக்கல் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. அதன்படி பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரெயில் என்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கியது.

மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு பழனி ரெயில்நிலையத்துக்கு வந்தடைந்தது. பழனி வந்தவுடன் டீசல் என்ஜின் கழற்றப்பட்டு, மின்சார ரெயில் என்ஜின் பொருத்தப்பட்டு கோவை வரை பயணிகளுடன் அந்த ரெயில் இயக்கப்பட்டது.

முன்னதாக ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயிலை, வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் வரவேற்றனர். இந்தநிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் முருகானந்தம், பச்சமுத்து, சீனிவாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவை-மதுரை வழித்தடத்தில் திண்டுக்கல்-பழனி இடையே மட்டுமே ரெயில்வே மின்மயமாக்கல் பணி நிலுவையில் உள்ளது. அந்த பணியை விரைவில் முடித்து, மதுரை-கோவை இடையே மின்சார ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே துறையினர் தெரிவித்தனர்.


Next Story