நின்றபடி ஓட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்


நின்றபடி ஓட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
x

இளம்பிள்ளை அருகே நின்றபடி ஓட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடித்து அசத்தினார்.

சேலம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே எழுமாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் யோகபிரதீப் (வயது 21). இவர், காக்காபாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், தனது முயற்சியால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புதுமையாக தயாரித்துள்ளார். சார்ஜர், பேட்டரியுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அந்த ஸ்கூட்டரை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 55 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் ஓட்டி செல்லலாம் என்றும், மற்ற ஸ்கூட்டர் மாதிரி இல்லாமல் நின்ற படியும், அமர்ந்து கொண்டும் ஓட்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.30 ஆயிரம் செலவு ஆகியுள்ளதாகவும் யோகபிரதீப் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, எனது சொந்த தயாரிப்பில் கண்டுபிடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நின்று கொண்டு ஓட்டலாம், சீட்டில் அமர்ந்து கொண்டும் ஓட்டலாம். அந்த ஸ்கூட்டரில் தான் தினமும் கல்லூரிக்கு சென்று வருகிறேன். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் காண்பிக்க கொண்டு வந்தேன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் வர்த்தக ரீதியாக தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கு அரசு உதவி புரிய முன்வர வேண்டும், என்றார்.


Next Story