கிருஷ்ணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள இண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. தொழிலாளி. இவருடைய மனைவி மாது (வயது 47). இவர் துவைத்த துணிகளை இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அந்த கம்பி அருகே மின்விளக்குக்காக அமைக்கப்பட்ட வயர் இருந்ததாக கூறப்படுகிறது. துணிகளை காய வைத்தபோது மாதுவை திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story