மின்சாரம் தாக்கி ஊராட்சி துணைத்தலைவர் சாவு


மின்சாரம் தாக்கி ஊராட்சி துணைத்தலைவர் சாவு
x

மதுக்கூர் அருகே கடையை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி ஊராட்சி துணைத்தலைவர் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

மதுக்கூர்;

மதுக்கூர் அருகே கடையை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி ஊராட்சி துணைத்தலைவர் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கியது

தஞ்சை மாவட்டம் மதுக்கூரை அடுத்த பெரியகோட்டை வெட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரசிங்கம்(வயது 47). பெரிய்கோட்டை ஊராட்சி துணைத்தலைவரான இவர் தன் வீட்டு அருகே பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீரசிங்கம் தனது கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீரசிங்கம் மின் இணைப்பில் பிளக்கை சொருகியபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

பரிதாப சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட வீரசிங்கத்தை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரசிங்கம் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த வீரசிங்கத்துக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story