மின்சாரம் தாக்கி மாணவன் சாவு


மின்சாரம் தாக்கி மாணவன் சாவு
x

மின்சாரம் தாக்கி மாணவன் சாவு

திருப்பூர்

காங்கயம்

மூலனூர் அருகே நத்தப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன். ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் செல்வகுமார் (வயது 14). அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் பள்ளி அரையாண்டு விடுமுறை விடப்பட்டதால், சிறுவன் காங்கயம்- தாராபுரம் சாலை சக்தி நகர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளான்.

இந்தநிலையில் சிறுவன் செல்வகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று காலை உறவினர் வீட்டின் அருகே விளையாடினான். அப்போது வீட்டின் அருகே உள்ள மின்சார மீட்டர் பெட்டியின் கம்பியை எதிர்பாராத விதமாக தொட்டுள்ளார். அப்போது அந்த கம்பியின் வழியாக மின்சாரம் பாய்ந்து சிறுவனை தாக்கியது.

இதனால் சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்டர் பெட்டியை ஆப் செய்துவிட்டு, உடனடியாக சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காங்கயத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-----


Next Story