மின் கம்பிகளை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
ஒரத்தநாடு அருகே அரசுக்கு சொந்தமான மின் கம்பிகளை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்
ஒரத்தநாடு;
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு கடையில் அரசு மின்வாரியத்துக்கு சொந்தமான மின்கம்பிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மின்வாரிய இளநிலை பொறியாளர் மனோகரன் ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசுக்கு சொந்தமான மின் கம்பிகளை பதிக்க வைத்திருந்த ஒரத்தநாட்டை சேர்ந்த மகாலிங்கம் (வயது58), சேகர் (60) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த மின் கம்பிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story