மின்ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட விளக்கக்கூட்டம்


மின்ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட விளக்கக்கூட்டம்
x

காட்பாடியில் மின்ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட விளக்கக்கூட்டம் நடந்தது.

வேலூர்

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர். அதை முன்னிட்டு வேலை நிறுத்த போராட்ட விளக்கக்கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வேலூர் கிளை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1-12-2019 முதல் புதிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும். 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story