சாத்தான்குளத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சாத்தான்குளத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் மின்விநியோகம் சார்பில் மின்நுகர்வோர் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. தற்போது தசரா விழா நடந்து வருவதால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அக்கூட்டம் வருகிற 21-ந் தேதி நடத்தப்படும். அன்றைய தேதியில் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம். கூட்டத்தில் தெரிவிக்கப்படும் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story