ரூ.4 லட்சத்தில் மின் கருவிகள் அமைப்பு
நெல்லை டவுன், பேட்டையில் ரூ.4 லட்சத்தில் மின் கருவிகள் அமைக்கப்பட்டது.
நெல்லை பேட்டை மற்றும் டவுன் மின் பாதைக்கு உண்டான மின்தடை சாதனம் காலவதியானதால் உடனடியாக ரூ.4 லட்சத்தில் இரண்டு புதிய மின் தடை சாதனம் அமைப்பதற்க்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவிட்டார். இதையடுத்து நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் பொறியாளர் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி மற்றும் மின் அளவி சோதனைப் பிரிவு செயற்பொறியாளர் ஷாஜகான் ஆகியோர் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை படி இரண்டு மின்தடை சாதனங்கள் அமைக்கப்பட்டன. இந்த 2 கருவிகளும் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் சங்கர், சுரேஷ்குமார், உதவி மின் பொறியாளர்கள் மாணிக்கராஜ், சரவணபவன், மேகலா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் பேட்டை மற்றும் டவுன் பகுதி மக்களுக்கு சீரான மின் வினியோகம் மற்றும் மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.