பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்பு குழு அமைப்பு


பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்பு குழு அமைப்பு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் மின் கட்டமைப்பில் ஏற்படும் இடர்பாடுகளை சீரமைக்க பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் மின் கட்டமைப்பில் ஏற்படும் இடர்பாடுகளை சீரமைக்க பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மின் இடர்பாடுகள்

வடகிழக்கு பருவ மழை தற்பொழுது தொடங்க உள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்களுக்கு மழையினால் மின் கட்டமைப்பில் ஏற்படும் இடர்பாடுகளை விரைந்து சீரமைத்து தடையற்ற மின்சாரம் வழங்க மாவட்டத்தில் உப கோட்டம் வாரியாக பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சிவகங்கை கோட்டம், சிவகங்கை உபகோட்டம் காளையார் கோவில் உபகோட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் செயற்பொறியாளர் செல்போன் எண் 94458 53080 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிக்கலாம்

சிவகங்கை நகர், சிவகங்கை ஊரகம் மதகுபட்டி மற்றும் மலம்பட்டி பிரிவுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி செயற்பொறியாளர் 94458 53074 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காளையார் கோவில் மறவமங்கலம் மற்றும் நாட்டரசன் கோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் 94458 53078 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இதே போல சிவகங்கை மின் பகிர்மான கோட்டத்தை சேர்ந்தவர்கள் பருவ மழை காலங்களில் ஏற்படும் மின்தடை மின் மாற்றி பழுது மற்றும் மின் கட்டமைப்பில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய மின் தடை நீக்கும் மையம் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story