மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆய்வு


மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆய்வு
x

பாபநாசம் வனப்பகுதியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆய்வு செய்தார்

திருநெல்வேலி

பாபநாசம் வனப்பகுதியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆய்வு செய்தார்.

கிராமத்திற்கு மின்சாரம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை கிராமமான பாபநாசம் கீழ் முகாம் பிரிவிற்குட்பட்ட திருப்பணிபுரம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின் கம்பங்களும், மின் பாதைகளும் அமைக்க வேண்டிய இடம் வனத்துறையிடம் இருப்பதால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க தற்பொழுது மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கலந்துரையாடல்

இந்த பணியை மேற்பார்வை பொறியாளர் ‌குருசாமி ஆய்வு செய்தார். அப்பொழுது திருப்பணிபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல் நடத்தி, தேவைகளை கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக வழங்கப்பட்ட சேமிப்புக் கலனுடன் கூடிய‌ சூரிய ஒளி மின்விளக்குகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தாமிரபரணி ஆறு 3 இடங்களில் கிளை ஆறுகளாக பிரிவதால், ஆறு இரட்டை மின்கம்பங்களுடன் சுமார் 52 மின்கம்பங்கள் மூலம் உயர் அழுத்த மின் பாதைகள் கொண்டு சென்று மின்மாற்றி அமைத்து அங்கு இருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மதிப்பீடு தயார் செய்ய செயற் பொறியாளர் சுடலையாடும்பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி, உதவி மின் பொறியாளர் விஜயராஜ் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

ரெட்டியார்பட்டி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம், நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் ரெட்டியார்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் சூரிய ஒளி மின்சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து பெறப்படும் மின்சாரம் ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆய்வு பணிகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டனர்.

நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி ஆகியோர் இணைந்து இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது நெல்லை சந்திப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தங்க முருகன், உதவி மின் பொறியாளர் (ரெட்டியார்பட்டி) அபிராமிநாதன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.


Next Story