மின் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


மின் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வேலூர் அருகே மின் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரை சேர்ந்த ரங்கநாதன் மகன் அசோக்குமார் (வயது 25). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அசோக்குமார் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும், அவரை பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story