மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடை த்து 5 பவுன் நகைகள் திருட்டு
சீர்கா ழி அருகே பட்டப்பகலில் மின் ஊழியர் வீட் டி ன் பூ ட்டை உடைத்து 5 பவுன் நகைகளை திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்கா ழி அருகே பட்டப்பகலில் மின் ஊழியர் வீட் டி ன் பூ ட்டை உடைத்து 5 பவுன் நகைகளை திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
மின் ஊழியர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சி கா மாட்சி நகரை
சே ர்ந்தவர் ரமேஷ்(வயது 47). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறா ர். இவரது மனைவி சத்தியா, சீர்காழி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் தங்களது மகள்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
5 பவுன் நகைகள் திருட்டு
இந்த தகவலின் பேரில் சத்யா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகிய இருவரும் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது முன் பக்க கதவு உடைகப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், இருவரும் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வீட்டில் பதிவா கி இருந்த கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பரபரப்பு பட்டப்பகலில், மர்ம நபர்கள் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.