அடிக்கடி ஏற்படும் தொடர் மின்வெட்டால் தொழில் வர்த்தகம் பாதிப்பு


அடிக்கடி ஏற்படும் தொடர் மின்வெட்டால் தொழில் வர்த்தகம் பாதிப்பு
x

அவினாசி பகுதியில் அடிக்கடி ஏற்படும் தொடர் மின்வெட்டால் தொழில் வர்த்தகம் பாதிப்பதாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்

அவினாசி

அவினாசி பகுதியில் அடிக்கடி ஏற்படும் தொடர் மின்வெட்டால் தொழில் வர்த்தகம் பாதிப்பதாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் மின்வெட்டு

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகள் உள்ளன. திருப்பூருக்கு மிக அருகில் அவினாசி உள்ளதால் இங்கு ஏராளமான பனியன் கம்பெனிகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள் மற்றும் கேட், கிரில் ஒர்க் ஷாப்புகள், மோட்டார் பம்புசெட் தயாரிப்பு கம்பெனிகள், மர அறுப்பு ஆலைகள், அரிசி ஆலைகள், உள்ளிட்ட ஏராளமான சிறுதொழில்களும் இயங்கிவருகின்றன.

இவை அனைத்தும் மின்சாரத்தை அடிப்படையாக கொண்டுதான் செயல்பட வேண்டும். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி மின் வினியோகம் துண்டிக்கப்படுவதாக தொழில்முனைவோர் குற்றம் ்சாட்டியுள்ளனர்.

தொழில்கள் பாதிப்பு

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தொழில்கள் தடையின்றி செயல்படவும், எந்த வேலை செய்வதற்கும், வீட்டு பயன்பாட்டிற்கும் மிக முக்கியத் தேவையாக மின்சாரம் உள்ளது. இங்கு தினமும் 7, 8 மணிநேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுவதுடன் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது.

இதனால் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மாதம் இருமுறை மின்தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story