எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை
தக்கலை அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
எலக்ட்ரீசியன்
தக்கலை அருகே உள்ள கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிசந்தர் (வயது 30), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி நிஷாந்தி (28), தனியார் பள்ளியில் நூலகராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு அஸ்வதி (6), அனுகிரகா (1½) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மணிசந்தருக்கு மது பழக்கம் உண்டு. இதுதொடர்பாக நிஷாந்திக்கும், மணிசந்தருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால் நிஷாந்தி கண்டித்துள்ளார். பின்னர் கோபத்துடன் 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தற்கொலை
பின்னர் மறுநாள் மணிசந்தர் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணிசந்தர் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடினார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
மேலும் இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.