கிணற்றில் குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை


கிணற்றில் குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் கிணற்றில் குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை

விழுப்புரம்

திண்டிவனம்

சென்னை புதுப்பேட்டை கண்ணகி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் முருகன்(வயது 35). எலெக்ட்ரீசியனான இவர் திண்டிவனம் அருகே உள்ள பாஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி(28) என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிவசங்கர்(14), முகேஷ்(12), சின்னா(9) என்ற 3 மகன்கள் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உடைய முருகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து அவரது மனைவியுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவனை கோபித்துக்கொண்டு தனலட்சுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாஞ்சாலத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவியை தேடி இங்கு வந்த முருகன் மீண்டும் மது அருந்திக்கொண்டு வந்து தனலட்சுமியை அடித்து உதைத்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த முருகன் அருகில் உள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story