மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி


மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி
x

மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

திருப்பூர்

அவினாசி

அவினாசியை அடுத்து பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது40). இவர் எலெக்ட்ரீசியனராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா (35) என்ற மனைவியும், கருப்புசாமி (17), அரிகரன் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பெரியாயிபாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மின் பராமரிப்பு பணி செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டர். சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story