மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்ற எலக்ட்ரீசியன் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்ற எலக்ட்ரீசியன் சாவு
திங்கள்சந்தை:
நாகர்கோவில் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் சிவன்கோவில்தெருவை சேர்ந்தவர் சுதிகிருஷ்ணன் (வயது 60), எலக்ட்ரீசியன். இவருக்கு ஜலஜா (55) என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. இவர் சம்பவத்தன்று மதியம் நாகர்கோவிலில் இருந்து தோட்டியோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். சுங்கான்கடை அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பின் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சுதிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.