பஸ் சக்கரத்தில் சிக்கி எலக்ட்ரிசீயன் பலி
மொபட்டில் கிரிவலம் சென்ற எலக்ட்ரிசீயன் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 45), எலக்ட்ரிசீயன். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பவுர்ணமி என்பதால் முத்து மொபட்டில் கிரிவலப்பாதையில் வலம் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காஞ்சி சாலையில் சந்திரலிங்கம் அருகில் செல்லும் போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் கதவை உள்ளே இருந்த குழந்தை திறந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மொபட்டில் வந்த முத்து எதிர்பாராத விதமாக காரின் கதவில் மோதி கீழே விழுந்து உள்ளார். அப்போது எதிரில் வந்த தனியார் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.