கன்னங்குறிச்சியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு


கன்னங்குறிச்சியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
x

கன்னங்குறிச்சியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் இறந்தார்.

சேலம்

கன்னங்குறிச்சி:

கன்னங்குறிச்சி ஸ்ரீராம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). எலக்ட்ரீசியன். நேற்று தனது வீட்டின் அருகே நடைபெற இருந்த விருந்து நிகழ்ச்சிக்காக கிரைண்டர் ஏற்பாடு செய்து, மின் இணைப்பு கொடுத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர், அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story