மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 25). இவர் பூபால்பட்டி தெருவில் உள்ள கடையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கடையில் உள்ள குளிர்சாதன பெட்டியை பழுது நீக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். இதையடுத்து சக ஊழியர்கள் அவரை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார், கார்த்திக்கின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.