மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
ஓசூர், தளி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஓசூர் கோட்டம் சிப்காட் பேஸ்-2 பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, சிப்காட் பேஸ்-2, பத்தலபள்ளி, குமுதேபள்ளி, வெல்பிட் ரோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இதேபோல், தளி துணை மின்நிலையத்திற்குட்பட்ட தளி, ஜவளகிரி, கும்மளாபுரம், கக்கதாசம், அகலக்கோட்டை, தேவகானபள்ளி, அன்னியாளம், பின்னமங்கலம், ஆறுப்பள்ளி, சி.ஏ.பள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மற்றும் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பராமரிப்பு பணி நடப்பதால் இந்த இரு நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story