தாளவாடி அருகே கூலித்தொழிலாளி வீட்டுக்கு ரூ.95 ஆயிரம் மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சி


தாளவாடி அருகே கூலித்தொழிலாளி வீட்டுக்கு ரூ.95 ஆயிரம் மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சி
x

தாளவாடி அருகே கூலித்தொழிலாளி வீட்டுக்கு ரூ.95 ஆயிரம் மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சி

ஈரோடு

தாளவாடி

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் ரேவண்ணா (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் சிமெண்டு ஓடு போட்ட வீட்டில் வசித்து வருகிறார்.

தனது வீட்டுக்கு மனைவி காளி பெயரில் ரேவண்ணா மின் இணைப்பு பெற்றுள்ளார். இவர் தன்னுடைய வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்தி வந்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணமே வராமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று அவரது செல்போனுக்கு 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்த ரேவண்ணா அதிர்ச்சி அடைந்தார். உடனே தாளவாடியில் உள்ள தனியார் கணினி சேவை மையத்துக்கு சென்று தனது மின்சார கட்டணத்தை காட்டச்சொல்லி பார்த்தார். அதிலும் மின்கட்டணமாக 94 ஆயிரத்து 985 ரூபாய் இருந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் தாளவாடி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அவர்கள், 'மின்கட்டணம் கணக்கீடு செய்யும்போது குளறுபடி ஏற்பட்டிருக்கும். அதை சரிசெய்து தருகிறோம'் என தெரிவித்தனர்.

கூலித்தொழிலாளி வீட்டு்க்கு ரூ.95 ஆயிரம் மின்கட்டணமாக வந்தது அந்த பகுதி மக்களையும் வியப்புக்கு உள்ளாக்கியது.


Next Story