மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - தமிழ்நாடு மின்வாரியம்
மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்துக்கு சாதாரண உடை அணிந்து வர கூடாது என்றும், பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்கள் வேட்டி, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story