மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

மன்னார்குடியில், இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

திருவாரூர்

மன்னார்குடி;

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மன்னார்குடி கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (புதன் கிழமை) காலை 10.30 மணிக்கு மன்னார்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் தெ.காளிதாஸ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மன்னார்குடி கோட்டத்துக்கு உட்பட்ட மன்னார்குடி, வடுவூர், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதி மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின்வாரியம் குறித்த குறைகளை நேரில் தெரிவிக்கலாம். இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் பி.மணிமாறன் தெரிவித்துள்ளார்.


Next Story