ஒரத்தநாட்டில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ஒரத்தநாட்டில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஓரத்தநாடு மின்வாரிய அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வியாழக்கிழமைகளில் இக்கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைகளைதீர்க்கும் பொருட்டு, தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுவருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்குரிய கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. எனவே ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு, ஒக்கநாடுகீழையூர், பின்னையூர், பொய்யுண்டார்கோட்டை, கண்ணுகுடிமேற்கு, மேலஉளூர், சாலியமங்கலம், மாரியம்மன்கோவில், அம்மாப்பேட்டை, சூரக்கோட்டைமற்றும் பனையக்கோட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களைச் சார்ந்த பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.