விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்


விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பொன்னங்குப்பத்தை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 45), விவசாயி. இவருடைய கிணற்றின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பை ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டாருக்கு மாற்ற சிட்டாம்பூண்டியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகன்மோகனை அணுகினார். அப்போது அவர், மின் இணைப்பு மாற்றம் செய்ய அரவிந்தனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு கறாராக கேட்டுள்ளார். பின்னர் இதுபற்றி அரவிந்தன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவிக்க போலீசார் கூறிய அறிவுரைப்படி நேற்று முன்தினம் அவர், ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஜெகன்மோகனிடம் கொடுத்தார். அந்த லஞ்சப்பணத்தை வாங்கும்போது ஜெகன்மோகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக கைதான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகன்மோகன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் மண்டல மின்வாரிய தலைமைப்பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் உத்தரவிட்டுள்ளார்.


Next Story