விவசாயிக்கு தாமதமாக மின் இணைப்பு வழங்கியமின்வாரிய அதிகாரிகள் ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்கடலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு


விவசாயிக்கு தாமதமாக மின் இணைப்பு வழங்கியமின்வாரிய அதிகாரிகள் ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்கடலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிக்கு தாமதமாக மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள், ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கடலூர்

சிதம்பரம் கீழத்தெருவை சேர்ந்தவர் வசந்த். விவசாயி. இவர் தெற்கு விருதாங்கன் கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு விவசாய மின் இணைப்பு பெற ரூ.50 விண்ணப்ப கட்டணம் செலுத்தி இணைப்பு பெற காலதாமதம் ஏற்படும் என்பதால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுயநிதி முழுத்தொகை திட்டத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தி லால்பேட்டை இளமின் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 29.12.2017 அன்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்காமல், காலதாமதமாக 10.5.2018 அன்று மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இழப்பீடு

இதனால் மனஉளைச்சல் அடைந்த வசந்த் இது பற்றி கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில், காலதாமதமாக மின் இணைப்பு வழங்கியதில் லால்பேட்டை இளமின் பொறியாளர், காட்டுமன்னார்கோவில் உதவி செயற்பொறியாளர், சிதம்பரம் செயற்பொறியாளர் ஆகியோரின் சேவை குறைபாடே இதற்கு காரணம் என்றும், ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயி வசந்த்திற்கு ஏற்பட்ட மனஉளைச்சல், அலைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் சேர்த்து ரூ.55 ஆயிரத்தை மின்வாரிய அதிகாரிகள் 3 பேரும் சேர்ந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story