பெரம்பலூரில் மின்சார கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.7¼ கோடியில் நிறைவு


பெரம்பலூரில் மின்சார கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.7¼ கோடியில் நிறைவு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்சார கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.7¼ கோடியில் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரம்பலூர்

ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @ 2047 என்ற மின்சார பெருவிழா பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேசுகையில், மின்சார பெருவிழாக்கள், நாடு முழுவதும் ஒளிமயமான இந்தியா- ஒளிமயமான எதிர்காலம்- பவர்@2047 என்ற திட்டத்தின் கீழ், அதிகமான பொதுமக்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும், மின்சார துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய செய்திகளை குடிமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலும் கொண்டாடப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து மின்சார துறை அலுவலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.1.95 கோடி செலவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது, என்றார்.

இதில் மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ராகேஷ் மேத்யூ, செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், குரும்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு வேப்பந்தட்டையில் மின்சார பெருவிழா பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் நடந்தது. அவர் கூறுகையில் இந்த பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.5.19 கோடி செலவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது, என்றார்.


Next Story