மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை ஆலோசனை


மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை ஆலோசனை
x

மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின்வெட்டு என்பது அதிகமாக உள்ளது. திய திட்டங்கள் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி கிடைப்பதால் மின் தட்டுப்பாடு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் தேவையை சமாளிக்க வேண்டிய சூழலில் தமிழக அரசு உள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் எதிர்கால தேவையை உணர்ந்து திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மின்சாரத் துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில், கோடை காலத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம், தொழில் நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மின் மோட்டார்கள் பொருத்தும் பணி , மின்சார வாரியங்கள் ஏற்படும் விபத்துக்கள் , அடிக்கடி ஏற்படும் மின்தடை ஆகியவற்றை சரி செய்வது குறித்தும் தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.


Next Story