கழிவுநீர் கால்வாயில் அமைத்த மின்கம்பங்கள்


கழிவுநீர் கால்வாயில் அமைத்த மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் கழிவுநீர் கால்வாயில் அமைத்த மின்கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூரில் கழிவுநீர் கால்வாயில் அமைத்த மின்கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கால்வாயில் கம்பங்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட ஹைதர் அலி தோட்டம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 8 புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் விரைவில் அவற்றின் அடிப்பாகம் துருபிடிக்க ஆரம்பித்தது. மேலும் சரிந்து விழும் அபாய நிலயைில் இருந்தது.

பொதுமக்கள் அதிருப்தி

இதைத்தொடர்ந்து அந்த மின்கம்பங்களின் அடிப்பாகத்தில் கூடுதலாக ஒரு இரும்பு கம்பி வைத்து வெல்டிங் செய்யப்பட்டது. ஆனால் மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ரூ.24 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக அதில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் தரமாக பணிகள் நடைபெறும். மேலும் மின் விபத்து ஏற்படாமலும் தடுக்க முடியும் என்றனர்.


Next Story