மணல் கொள்ளையால் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள்


மணல் கொள்ளையால் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள்
x

குடியாத்தத்தில் மணல் கொள்ளையால் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் உள்ளன.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு கவுண்டன்யா மகாநதி ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டது. தற்போது கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வீடுகள் இல்லாததால் மணல் கொள்ளை இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

குடியாத்தம் நகராட்சி 25-வது வார்டு நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு செல்லியம்மன் கோவில் அருகே ஆற்று ஒரம் மின்கம்பங்கள் உள்ளன. மணல் கொள்ளையர்கள் அந்த மின்கம்பங்கள் சுற்றி பல அடி ஆழத்திற்கு மணல் எடுத்துள்ளனர். தற்போது மின் கம்பங்கள் சுற்றியும் பெரும் பள்ளங்கள் உள்ளன. இதனால் எந்த நேரமும் மின் கம்பங்கள் சாயும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பங்கள் செல்லியம்மன் கோவில் அருகே இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள் மின்கம்பங்கள் உள்ள வழியாக நடந்து செல்கின்றனர் அப்போது மின்கம்பங்கள் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது உடனடியாக காவல்துறையினரும் மின்வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story