மின்சார சிக்கன வார விழா


மின்சார சிக்கன வார விழா
x

சோளிங்கரில் மின்சார சிக்கன வார விழா நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சோளிங்கர் கோட்டம் சார்பில் மின்சார சிக்கன விழிப்புணர்வு வார விழா நடந்தது.

இதை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் சோளிங்கர் காந்தி சிலை அருகில் இருந்து காந்தி ரோடு, அண்ணா சாலை, பஸ் நிலையம் வரை சென்றது.

ஊர்வலத்திற்கு சோளிங்கர் உதவி செயற்பொறியாளர் சங்கர் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் சோளிங்கர் உமாசந்தரா, காவேரிப்பாக்கம் துரைசங்கர், நகராட்சி துணைத்தலைவர் பழனி, நகராட்சி உறுப்பினர்கள் அசோகன், அன்பரசு, லோகேஸ்வரி சரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக உதவி பொறியாளர்கள் சோளிங்கர் மோகன்ராஜ் ஜெயபாரதி, மேல்வெங்கடாபுரம் வேலு, பனப்பாக்கம் சுப்பிரமணி, காவேரிப்பாக்கம் ரமேஷ்குமார், சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மின்வாரிய ஊழியர்கள் வழங்கினர்.

பின்பு வாசவி மஹால் திருமண மண்டபத்தில் மின்சார சிக்கனம் குறித்த கூட்டம் நடைபெற்றது

இதில் சோளிங்கர் உதவி செயற்பொறியாளர் சங்கர் மின்சாரம் சேமிப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார். முடிவில் பாணாவரம் உதவி பொறியாளர் பூபாலன் நன்றி கூறினார்.


Next Story