மின்சார சிக்கன வார விழா


மின்சார சிக்கன வார விழா
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் மின்சார சிக்கன வார விழா நடந்தது.

தென்காசி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் சார்பில் தென்காசி கோட்டத்தில் தேசிய மின்சார சிக்கன வார விழா நடந்தது. தென்காசியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் கற்பகவிநாயக சுந்தரம் வரவேற்றார். நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். நெல்லை பொது செயற்பொறியாளர் வெங்கடேஷ்மணி மின்சார சிக்கனம் பற்றி கருத்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தென்காசி நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி தாளாளர் மணிமாறன், ஓய்வு பெற்ற மேற்பார்வை மின்பொறியாளர் ராமகிருஷ்ணன், பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி. தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் தென்காசி உதவி செயற்பொறியாளர் சைலஜா நன்றி கூறினார்.


Next Story