மின்ஒயர் திருட்டு


மின்ஒயர் திருட்டு
x

பாளையங்கோட்டையில் மின்ஒயர் திருடப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் வேதநாயகம். இவரது மனைவி தெய்வக்கனி (வயது 52). இவர் அருகே காமாட்சி நகரில் வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மின்ஒயர்களை மர்மநபர் திருடி சென்றார். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story