மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில், பாளையங்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சம்மேளன செயலாளர் பெருமாள் சாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. செயலாளர் கந்தசாமி, ஐக்கிய சங்க செயலாளர் மாதவன், பொறியாளர் கழக செயலாளர் முருகன், பொறியாளர் சங்க செயலாளர் இசக்கிபாண்டி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கருப்பசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
தொழிலாளர்களுக்கு முடக்கி வைக்கபட்ட பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்புவிப்பு விடுப்பு காசாக்குதல் உடனடியாக அனுமதிக்க வேண்டும். 1-12-2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story