மின்வாரிய ஊழியர் தற்கொலை
கூடலூர் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வனதுரை (வயது 55). லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராணி. நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வனதுரை வீட்டில் உள்ள தனி அறையில் தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவரது மனைவி எழுந்து பார்த்தபோது வனதுரை தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைக்கண்ட அவரது மனைவி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் வனதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story