மின்வாரிய ஊழியர் தற்கொலை
நாசரேத்தில் மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள அறிவான்மொழி மேற்கு தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 56). இவருடைய மனைவி பால் தங்கம் (50). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் செய்து வெளியூரில் வசித்து வருகிறார். பாலசுந்தரம் சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நாலாட்டின்புத்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நாசரேத் அம்பாள் நகர் தேரிக்காட்டு பகுதியில் பாலசுந்தரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலின் அருகே அவர் பயன்படுத்திய மொபட் வாகனமும் இருந்துள்ளது. அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் நாசரேத் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலசுந்தரத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்ட ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.