மோட்டார்சைக்கிள் மோதி மின்வாரிய ஊழியர் பலி


மோட்டார்சைக்கிள் மோதி மின்வாரிய ஊழியர் பலி
x

தேசூரில் மோட்டார்சைக்கிள் மோதி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தேசூர் பேரூராட்சி புகையிலைக்காரர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 49). இவர் தேசூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு மூகாம்பிகை என்கிற அம்பிகா என்ற மனைவியும், ஜெயஸ்ரீ (15), காவியா (14) ஆகிய 2 மகள்களும், ஆதிமேனன் (7) என்ற மகனும் உள்ளனர்.

குணசேகரன் தேசூர் - சீயமங்கலம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கம் பூண்டி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சோலையப்பன் (20) மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து குணசேகரன் மீது மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story