கடலூர் கேப்பர்மலையில்மின்வாரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கான ஆயத்த கூட்டம்
கடலூர் கேப்பர்மலையில் மின்வாரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கான ஆயத்த கூட்டம் நடத்தினா்.
கடலூர் முதுநகர்,
மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு, அலுவலர்களுக்கு மற்றும் பொறியாளர்களுக்கு 2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், வருகிற 10-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான விளக்க கூட்டம் கடலூர் கேப்பர் மலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஐ. என். டி.யு.சி. மாநில தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தானம், அன்பழகன், ரவிச்சந்திரன், ராயல் ஜோதிநாதன், பிரபாகரன், சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் ரவிசங்கர், வேங்கடபதி, தேசிங்கு, பூர்ண சந்திரமோகன், பாபு, ரவிச்சந்திரன், செல்வன், பெரியாண்டவர், ஆகியோர் கோரிக்கைகள் மற்றும் வேலைநிறுத்த போராட்டம் குறித்து பேசினர்.
இதில் பால ஜெயப்பிரகாஷ், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.