மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வள்ளியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

மின்வாரிய ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை கருதி தமிழக அரசு உடனடியாக முத்தரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் வள்ளியூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வள்ளியூர் சுடர்மணி தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயலாளர் ஆனந்த நாகராஜன் சிறப்பு அழைப்பாளாக கலந்து கொண்டார். இதில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். செயலாளர் அருள், மாநில துணை தலைவர் கனிக்குமார், நெல்லை திட்ட தலைவர் சுப்பராயலு, திட்ட செயலாளர் சங்கரசுப்பு, திட்ட பொருளாளர் மகேந்திரன், அமைப்பு செயலாளர் ராமசாமி, பாரதிய மின்சார அலுவலர்கள் கழகத்தின் சார்பில் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மரபுசாரா எரிசக்தி துறை பொறுப்பாளர் விஜயன் நன்றி கூறினார்.


Next Story