காரையூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காரையூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

காரையூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

காரையூர்:

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ததை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் காரையூர் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது. மத்திய அரசே தாக்கல் செய்யாதே தாக்கல் செய்யாதே மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்யாதே என்று கோஷமிட்டனர். இதில் தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்கம், ஐ.டி.ஐ. பொறியாளர் சங்கம் என அனைத்து சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story