மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒப்படைக்க நடவடிக்கை


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒப்படைக்க நடவடிக்கை
x

15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் தனியாக பிரித்து வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்கள் இருப்பு அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் திறந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த மாதம் 28-ந் தேதி ஒப்படைப்பு

இந்த கிடங்கில் இருந்து 359 சியு எந்திரங்களும் 1415 பியு எந்திரங்களும் என மொத்தம் 1774 எந்திரங்கள் 15 வருடங்களுக்கு மேலானவை என கண்டறியப்பட்டு பிரித்து வைக்கப்பட உள்ளது. இவை வருவாய்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெய்சங்கர், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சாம்கிங்ஸ்டன், செந்தில்குமார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன், காங்கிரஸ் நகர தலைவர் லலித் ஆண்டணி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story