தாளவாடி அருகே விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானையை கட்டுப்படுத்த 2 கும்கி யானைகள் வரவழைப்பு


தாளவாடி அருகே விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானையை கட்டுப்படுத்த 2 கும்கி யானைகள் வரவழைப்பு
x

தாளவாடி அருகே விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானையை கட்டுப்படுத்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானையை கட்டுப்படுத்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

யானை அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு் வெளியே வருகிறது.

குறிப்பாக யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் உள்ள சாலைகளில் கரும்பு லாரிகளை தேடி தினமும் சுற்றி திரிகிறது. அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தி அதிலுள்ள கரும்புகளை சுவைத்து வருகிறது.

காரை நொறுக்கியது

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சாலையில் வந்த கார் கண்ணாடியை யானை அடித்து நொறுக்கியது. மேலும் பயணிகளுடன் வந்த அரசு பஸ்சை துரத்தியது. இதனால் டிரைவர் சாதுர்யமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி நகர்த்தி பயணிகளை காப்பாற்றினார்.

தாளவாடி வனச்சரகத்தில் உள்ள இரியபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதியில் ஒற்றை யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

விவசாயியை ெகான்றது

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திகினாரை கிராமத்தில் மாதேவன் என்ற விவசாயியை ஒற்றை யானை மிதித்து கொன்றது. இந்தநிலையில் தர்மாபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோட்ட காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா என்பவரை யானை மிதித்து கொன்றது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மல்லப்பா உடலை எடுக்க விடாமல் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். யானை தோட்டத்துக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் வலியுறுத்தினர்.

கும்கி யானைகள்

இதைத்தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் ஒற்றை யானையை பிடிக்க பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன அலுவலர்கள் பொள்ளாச்சியில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையை நேற்று காலை தாளவாடி வரவழைத்தனர். இதற்கிடையில் நேற்று இரவு ராஜவர்தன் என்ற கும்கி யானையும் தாளவாடிக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்்து 2 கும்கி யானைகள் மூலம் ஒற்றை யானையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story