அரசு பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய யானை


அரசு பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய  யானை
x

வேப்பனப்பள்ளி அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவரை யானை இடித்து தள்ளியது

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, கொங்கணபள்ளி மற்றும் எப்ரி வனப்பகுதிகளில் 11 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளை சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதில் 3 யானைகள் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகுந்தானி வனப்பகுதியில் முகாமிட்டு இருந்தன. நேற்று முன்தினம் யானை ஒன்று அலேகுந்தாணி கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. யானை பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியதை கண்டு கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


Next Story