கரும்பு லாரியை வழிமறித்த யானைக்கூட்டம்


கரும்பு லாரியை வழிமறித்த யானைக்கூட்டம்
x

கரும்பு லாரியை வழிமறித்த யானைக்கூட்டம்

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இந்த வழியாக செல்லும் கரும்பு லாரி டிரைவர்கள் சாலையோரம் கரும்பு கட்டுகளை போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்தநிலையில் நேற்று மதியம் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் குட்டியுடன் யானைகள் உலா வந்தன. அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை யானைகள் மறித்தன. அதன்பின்னர் யானைகள் கரும்புகளை எடுத்து சுவைக்க தொடங்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் லாரியின்மேல் ஏறி கரும்பு கட்டுகளை எடுத்து ரோட்டு ஓரம் வீசினார். உடனே யானைகள் சாலை ஓரம் சென்றுவிட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.


Next Story