தளி அருகே வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகள்
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பகுதிக்கு இடம்பெயர்ந்தன. இந்த யானைகள் தளி வனப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. அவற்றின் நடமாட்டத்தை ஜவளகிரி வனச்சரகர் சுகுமாரன் தலைமையிலான வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் டிரோன் மூலம் யானைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று 2-வது நாளாக யானைகள் தளி அருகே குட்டையில் ஆனந்தமாக குளித்தன. மேலும் அவை வனப்பகுதியில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story