காரப்பள்ளம் சோதனை சாவடியை முற்றுகையிட்ட ஒற்றை யானை


காரப்பள்ளம் சோதனை சாவடியை முற்றுகையிட்ட ஒற்றை யானை
x

காரப்பள்ளம் சோதனை சாவடியை முற்றுகையிட்ட ஒற்றை யானை

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் இந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி டிரைவர்கள் யானைகளுக்காக கரும்புகட்டுகளை சாலையோரத்தில் வீசிச்செல்வார்கள். இதனால் கரும்புகளை தின்று ருசி பார்த்த யானைகள் அடிக்கடி

சாலையில் உலா வருவதும், கரும்பு லாரிகளை மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தநிலையில் தாளவாடி அடுத்துள்ள காராப்பாடி சோதனை சாவடியில் அதிக பாரம் ஏற்றி வரும் கரும்பு லாரிகளை தடுப்பதற்காக சாலையில் குறுக்கே குறிப்பிட்ட உயரத்தில் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. கரும்பு ஏற்றி வரும் லாரிகளின் மேல் பகுதி இந்த கம்பியில் உரசும்போது கரும்புகள் சிறு சிறு துண்டுகளாகி சிதறி கிடக்கும். நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு ஒற்றை யானை ரோட்டில் சிதறிக்கிடந்த கரும்பு துண்டுகளை சுவைத்தபடி சாலையிலேயே நின்றுவிட்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. சிறிது நேரம் கழித்து, யானை காட்டுக்குள் சென்ற பின்னரே வாகனங்கள் செல்ல தொடங்கின.




Next Story