தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- மக்காச்சோள பயிர் நாசம்
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள் மக்காச்சோள பயிரை நாசப்படுத்தின.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள் மக்காச்சோள பயிரை நாசப்படுத்தின.
மக்காச்சோள பயிர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி நகர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டசுவாமி. விவசாயி. இவரது தோட்டம் ஊரையொட்டி உள்ளது. இங்கு அவர் 3 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிர் சாகுபடி செய்துள்ளார்.
நாசப்படுத்திய யானைகள்
இந்த நிலையில் நஞ்சுண்டசுவாமி நேற்று காலை தனது தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு மக்காச்சோள பயிர் நாசப்படுத்தப்பட்டு கிடந்தன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் தோட்டத்துக்குள் புகுந்துள்ளன. பின்னர் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளது. அதன்பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
யானைகளால் சுமார் 1 ஏக்கர் பரப்பளவு உள்ள மக்காச்சோள பயிர் நாசமானது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறும்போது, 'யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.