தாளவாடி அருகே விவசாய தோட்டங்களை முற்றுகையிட்ட யானைகள்


தாளவாடி அருகே விவசாய தோட்டங்களை முற்றுகையிட்ட யானைகள்
x

தாளவாடி அருகே விவசாய தோட்டங்களை யானைகள் முற்றுகையிட்டன.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே விவசாய தோட்டங்களை யானைகள் முற்றுகையிட்டன.

யானைகள் அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களிலும் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவைகள் தோட்டத்தில் உள்ள பயிர்களை ருசித்து பழகிவிட்டன. அதனால் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் இருக்கும் தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

விவசாயிகள் தீப்பந்தத்தை காட்டி யானைகளை காட்டுக்குள் விரட்டினாலும் சில மணி நேரம் கழித்து மீண்டும் காட்டை விட்டு வெளியேறி விடுகின்றன.

குறிப்பாக ஜீர்கள்ளி வனச்சரகத்தில் உள்ள திகனாரை, அருள்வாடி, மெட்டல்வாடி, மரியபுரம், மல்லன்குழி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளன.

3 மணி நேர போராட்டம்

இந்தநிலையில் நேற்று அதிகாைல ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து 10 யானைகள் வெளியேறி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்தை நோக்கி படையெடுத்தன. பின்னர் ஒன்றாக அங்குள்ள விவசாய தோட்டங்களை சுற்றி சுற்றி வந்தன. அதிகாலை நேரத்தில் யானைகள் கும்பலாக சுற்றுவதை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தார்கள்.

பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் 3 மணி நேரத்துக்கு பிறகு காட்டுக்குள் விரட்டினார்கள்.

யானை கூட்டம் மீண்டும் எப்போது ஊருக்குள் வரும் என்ற பீதியில் உள்ள விவசாயிகள், வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு அவைகளை விரட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Next Story